- புத்தூர் கிளை
12-10-2025 அன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு வேஷ்டி, புடவை வழங்கும் விழா நடைபெற்றது. ஸ்ரீ.பி.கே.ரெங்கநாதன், ஸ்ரீ.எஸ்.பாஷ்யம், ஸ்ரீ.வேணுகோபால், ஸ்ரீ.ஜி.ரங்கநாதன், ஸ்ரீ.வி.ராமானுஜம், ஸ்ரீ.கே.ஸ்ரீனிவாசன், புரொபசர் ஸ்ரீ.வி.கோபாலன் ஆகியோர் 15 பேருக்கு வேஷ்டி, புடவைகளை வழங்கினர். ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொருளாளர் ஸ்ரீ.ஆர்.கோவிந்தன் நன்றியுரையாற்றினார்.
திருச்சி மாவட்டம்
17-10-2025 அன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு மாவட்டத் தலைவர் ஸ்ரீ.என்.நாகராஜன் வழிகாட்டுதலுடன் ஸ்ரீரங்கம் கிளைத் தலைவர் ஸ்ரீ.ஜெகந்நாதன் மூலம், ஜெய்ஸ்ரீகார்டன், அண்ணாநகர் கிளை, திருவானைக்காவல் கிளை, அம்மா மண்டபம் கிளை, தெப்பக்குளம் கிளை, புத்தூர் கிளை, பொன்மலை கிளை, கே.கே.நகர் கிளைகளில் உள்ள 12 நபர்களுக்கு வேஷ்டி, புடவை வழங்கப்பட்டது.
16-11-2025 அன்று தலைவர் ஸ்ரீ.என்.நாகராஜன் வழிகாட்டுதல்படி தாம்ப்ராஸ் எழுச்சி நாள் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது. கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியுடன் நிகழ்ச்சி துவங்கியது. துணைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.ஜெகந்நாதன் தலைமை தாங்கி சங்க கொடியேற்றினார். ஸ்ரீ.சம்பத் முன்னிலை வகித்தார். மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.சித்ரா ஸ்ரீபதி வரவேற்புரையாற்றினார். குமாரி.ஸ்ருதி, குமாரன் ஸ்ரீவத்ஸன், சத்ய பிரமாண உறுதிமொழியேற்றனர். ஜெயஸ்ரீ கார்டன் கிளை நிர்வாகிகள் ஸ்ரீமதி.லக்ஷ்மி, ஸ்ரீமதி.பூமா, ஸ்ரீரங்கம் கிளை ஸ்ரீமதி.கல்யாணி, அம்மா மண்டபம் கிளை ஸ்ரீமதி.விஜயா தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். மாநில ஆலோசகர் ஸ்ரீ.சம்பத், மாநில இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.ஆர்.மணிகண்டன், மாநில மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.பிரபாவதி ஸ்ரீனிவாசன், தாம்ப்ராஸ் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி பற்றி சிறப்புரையாற்றினார்கள். சங்க வளர்ச்சிக்காக உழைத்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.டி.எஸ்.கோமதி நன்றி நவில ஸ்வஸ்தி வாசகம் தேசிய கீதத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
திருச்சி மாவட்டம் - ஜெயஸ்ரீகார்டன் கிளை
22-09-2025 முதல் 02-10-2025 வரை கிளையின் சார்பாக நவராத்திரி கீழ் குறிப்பிட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஸ்ரீமதி.பத்மா வாசுதேவன், ஸ்ரீமதி.ரமாமணி, ஸ்ரீமதி.விஜயா, ஸ்ரீமதி.ராதா, ஸ்ரீமதி.ரமா, பந்தல்காரர், ஸ்ரீமதி.திலகவதி, ஸ்ரீமதி.பிரபாவதி ஆகியோர் இல்லங்களில் பக்தி பாடல்கள் பாடி, லோக nக்ஷமத்திற்காக ப்ரார்த்தனை செய்தனர். ஸ்ரீமதி.பத்மாவதி வாசுதேவன், ஸ்ரீமதி.பிரபாவதி, ஸ்ரீமதி.ரமாமணி, ஸ்ரீமதி.ஐஸ்வர்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது.
03-10-2025 அன்று கிளை ஆலோசகர் ஸ்ரீமதி.பத்மாவதி வாசுதேவன் பிறந்த நாளை முன்னிட்டு அவரது இல்லத்தில் பஜனை பாடல்கள் பாடப்பட்டது. ஸ்ரீமதி.ரமாமணி, ஸ்ரீமதி.திலகவதி, ஸ்ரீமதி.ஐஸ்வர்யா, ஸ்ரீமதி.விஜயா, ஸ்ரீமதி.பிரபாவதி மற்றும் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். அனைவருக்கும் மங்கல பொருட்கள் வழங்கப்பட்டது.
04-10-2025, 05-10-2025, 10-10-2025 ஆகிய நாட்களில் லோக nக்ஷமத்திற்காக ஸ்ரீ சகஸ்ர நாம பாராயணம், பக்தி பாடல்கள், திருப்பாவை, பஜனை பாடல்கள் பாடப்பட்டது. ஸ்ரீமதி.பத்மாவதி, ஸ்ரீமதி.லதா, ஸ்ரீமதி.பானுமதி, ஸ்ரீமதி.பிரபாவதி, ஸ்ரீமதி.ரமாமணி, ஸ்ரீமதி.கலாவதி, ஸ்ரீமதி.லதா, ஸ்ரீமதி.பானுமதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
12-10-2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில் ஸ்ரீமதி.பத்மாவதி, ஸ்ரீமதி.ரமாமணி, ஸ்ரீமதி.கலாவதி, ஸ்ரீமதி.பிரபாவதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். சிறந்த கிளை விருது, தனி நபர் விருது வழங்கிய மாநிலத் தலைவர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
15-10-2025 அன்று தீபாவளி திருநாளை முன்னிட்டு மனநலம் குன்றிய 6 நபர்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டது.
18-10-2025 அன்று அதிதி சம்ஸ்கார் நடந்த பிராமண போஜனத்தில் கிளையின் சார்பாக நிர்வாகிகள் கலந்து கொண்டு உணவு பரிமாறினர். ஆண்களுக்கு தக்ஷ்சனையும், பெண்களுக்கு வஸ்த்ரம் வழங்கப்பட்டது. கிளைத் தலைவர் ஸ்ரீமதி.பத்மாவதி வாசுதேவன் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டார்.
27-10-2025, 01-11-2025, 11-11-2025 ஆகிய நாட்களில் கிளை மற்றும் ஸ்ரீராம் பஜனை மண்டலி இணைந்து கிளைத் தலைவர் ஸ்ரீமதி.பிரபாவதி மற்றும் நிர்வாகிகள் இணைந்து லோக nக்ஷமத்திற்காக பஜனை மற்றும் அபிராமி அந்தாதி, பாராயணம் செய்தனர்.
14-11-2025 அன்று கிளையின் சார்பாக காஞ்சி அம்மன் தொடக்க பள்ளியில் குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாநில மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.பிரபாவதி ஸ்ரீனிவாசன், ஆலோசகர் ஸ்ரீமதி.பத்மா, ஸ்ரீமதி.பானுமதி, ஸ்ரீமதி.திலகவதி, ஸ்ரீமதி.சித்ரா, ஸ்ரீமதி.மீனா ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாட்டினை செய்து சிறப்பித்தனர்.
16-11-2025 அன்று கிளையின் சார்பாக தாம்ப்ராஸ் எழுச்சி நாளை முன்னிட்டு சங்க கொடி ஏற்றப்பட்டது. ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் தாம்ப்ராஸ் எழுச்சி நாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம் - அய்யப்ப நகர் கிளை
24-10-2025 அன்று கிளையின் சார்பாக காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுஷ பூஜையை ஆலோசகர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன், ஸ்ரீ.எஸ்.பாலகிருஷ்ணன் ஆகியோர் பூஜையை நடத்தி வைத்தனர். நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
12-11-2025 அன்று கிளையின் சார்பாக ஸ்ரீ மஹாதேவ அஷ்டமி ஸ்ரீ புவனேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு லோகnக்ஷமத்திற்காக பிரார்த்தனை செய்தனர்.
16-11-2025 அன்று தாம்ப்ராஸ் எழுச்சி நாள் கொண்டாட்டம் கிளையின் சார்பாக நடைபெற்றது. தலைவர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன் தாம்ப்ராஸ் சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். கடவுள் வாழ்த்து, வேத கோஷம் சங்க உறுதிமொழியுடன் நிகழ்ச்சி துவங்கியது. தலைவர் சத்திய பிரமாண உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர். தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொருளாளர் ஸ்ரீ.எஸ்.ராமகிருஷ்ணன் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் நிறைவடைந்தது.
21-11-2025 அன்று கிளையின் சார்பாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அனுஷா பூஜையை கிளை ஆலோசகர் ஸ்ரீ.ஆர்.பாலசுப்ரமணியன், ஸ்ரீ.எஸ்.முத்துகிருஷ்ணன் ஆகியோர் நடத்தி வைத்தனர். நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
|