குமாரபாளையம்
31-07-2026 அன்று கிளையின் சார்பாக ஸ்ரீ மஹாலக்ஷ்மி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. ஏராளமான நம் சமூக மகளிர் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர். பின்னர் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீ.சுப்ரமணியன் தலைமை தாங்கினார். கிளைத் தலைவர் ஸ்ரீ.சாம்பஸிவ சிவாச்சாரியார் முன்னிலை வகித்தார். சிறப்பாக செயல்பட்டவர்கள் கௌரவிக்கப்பட்டனர். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.மஹாதேவன், இராசிபுரம் கிளைத் தலைவர் ஸ்ரீ.கார்த்திக் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி மோகனூர் கிளைத் தலைவர் சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.
|