29-06-2025 அன்று மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பி.வெங்கடேசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.நாராயணன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளாளராக ஸ்ரீ.பிரபாகர்ராவ் மாவட்ட இளைஞரணி இணைச் செயலாளராக ஸ்ரீ.பாஸ்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மாநில போஷகர் ஸ்ரீ.சம்பத் சிறப்பு விருந்தினராக மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நெய்வேலி கிளையின் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் நன்றி கூறினார்.
08-06-2025 அன்று பண்ருட்டி கிளை மகிளாசபாவின் சார்பாக 108 சுவாசினி பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கடலூர் மாவட்டம் -
கூத்தப்பாக்கம் கிளை
13-07-2025 அன்று கிளையின் கூட்டம் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்துடன் கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.வி.ராஜாராமன் தலைமையில் துவங்கியது. உபதலைவர் ஸ்ரீ.சம்பத், கடவுள் வாழ்த்து வேத கோஷம் வாசிக்க, மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.அலமேலு ஸ்ரீவத்ஸன் வரவேற்புரையாற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.சுரேஷ் சங்க உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர். அனைவரும் நலம் பெற ஸ்ரீ ம்ருத்யஜயஜபம் ஜெபிக்கப்பட்டது. சிறப்பு விருத்தினர்களாக கடலூர் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.வெங்கடேசன், பொதுச் செயலாளர் ஸ்ரீ.சுரேஷ் மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.பிரபாகரன், பண்ருட்டி கிளை உபதலைவர் ஸ்ரீ.சிவசுப்ரமணியன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். அனைவரையும் கிளையின் சார்பாக பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டனர். பொருளாளர் ஸ்ரீ.கணேசன் அறிக்கை சமர்ப்பித்தார். ஸ்ரீ.எஸ்.ஆர்.சுரேஷ் ஸ்ரீ ராமகிருஷ்ணன், ஸ்ரீ.சௌந்திரராஜன், ஸ்ரீ.பாலகுரு, ஸ்ரீ.ராகவன், ஸ்ரீ.பக்தவத்சலம், ஸ்ரீ.பாஸ்கரன், ஸ்ரீ.வெங்கட்ராமன், ஸ்ரீ.வினோத், ஸ்ரீ.ஜெயராமன், ஸ்ரீமதி.சித்ரா, ஸ்ரீமதி.செல்வி, ஸ்ரீமதி.லக்ஷ்மி, ஸ்ரீமதி.அலமேலு, ஸ்ரீமதி.ஜானகி, ஸ்ரீமதி.ஸ்ரீவித்யா மற்றும் பலர் கலந்து கொண்டு உரையாற்றினர். தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிக்க கேட்டுக் கொள்ளப்பட்டது. நக்ஷ்த்திரி லாக்யம் பாராயணம் செய்யப்பட்டது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.பிரணதார்த்திஹரன் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
|