வடவள்ளி கிளை
21-09-2025 அன்று நவராத்திரியை முன்னிட்டு கிளையின் சார்பாக ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவில் அமைந்துள்ள ஸ்ரீ துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் நடைபெற்றது. கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.மீனாக்ஷிசுந்தரம், பொதுச் செயலாளர் ஸ்ரீ.வி.பாண்டுரங்கன், துணைத் தலைவர் ஸ்ரீ.வி.எம்.ஸ்ரீனிவாசன், ஆலோசகர் ஸ்ரீ.வி.கோவிந்தராவ், அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.கே.என்.பரசுராமன், இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.என்.கண்ணன், செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.கே.எஸ்.விஜயகுமார், ஸ்ரீ.டி.சங்கரன், டாக்டர் ஸ்ரீ.கிருஷ்ணன் மற்றும் பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கிளை பொருளாளர் ஸ்ரீமதி.சித்ரா கிருஷ்ணகுமார் பூஜைக்கான ஏற்பாட்டை சிறப்பாக செய்திருந்தார்.
22-09-2025 அன்று கிளை மகளிரணி சார்பாக தாம்ப்ராஸ் கட்டடத்தில் ஸ்ரீ.சேஷாத்ரி தலைமையில் ஸ்ரீ லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கிளைப் பொருளாளர் ஸ்ரீமதி.சித்ரா கிருஷ்ணகுமார், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.உஷா கண்ணன் மற்றும் மகளிரணியினர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.மீனாக்ஷிசுந்தரம், ஆலோசகர் ஸ்ரீ.வி.கோவிந்தராவ், இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.வி.கண்ணன், டாக்டர் ஸ்ரீ.கிருஷ்ணன், ஸ்ரீ.வைத்தியநாதன் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்தனர்.
|