பேட்டை கிளை
02-11-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.ஆர்.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.சுந்தரராஜன் முன்னிலை வகித்தார். பொருளாளர் ஸ்ரீ.ஜி.சுப்ரமணியன் வரவேற்புரையாற்றினார். சிவன் கோவிலில் சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்றது. நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். தாம்ப்ராஸ் எழுச்சி நாளை சிறப்பாக கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீ.என்.கணேசன், ஸ்ரீ.ஆர்.சுந்தர்கணேஷ், ஸ்ரீ.என்.நரசிம்மன், ஸ்ரீ.எஸ்.ராமஸ்வாமி, ஸ்ரீமதி.ஆர்.கோமதி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கே.முரளி பட்டர் ஸ்வஸ்தி வாசகம் வாசிக்க, மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.அனுராதா நன்றி தெரிவித்தார்.
திருநெல்வேலி மாவட்டம் - மகாராஜ நகர் கிளை
16-11-2025 அன்று கிளையின் சார்பாக தாம்ப்ராஸ் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டது. சத்ய பிரமாண உறுதி ஏற்றனர். கிளைத் தலைவர் ஸ்ரீ.பி.பீ.சுந்தரேசன், உபதலைவர் ஸ்ரீ.மு.சுந்தர், செயலாளர் ஸ்ரீ.தேவராஜ் இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.சுப்பிரமணியன், ஆலோசகர் ஸ்ரீ.நம்பி ஸ்ரீனிவாசன், மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.எஸ்.ராமலக்ஷ்மி, ஸ்ரீமதி.மீனாஷி, ஸ்ரீ.ரமேஷ், ஸ்ரீ.சந்திரசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தலைவர் தனது உரையில் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்தார். நன்றியுரையுடன் கூட்டம் நிறைவடைந்தது.
|