மாப்படுகை கிளை
26-02-2025 அன்று ஸ்ரீ மஹா சிவராத்ரியை முன்னிட்டு ஸ்ரீப்ரஹன்நாயகி அம்பாள் சமேத ஸ்ரீ ஆபத்ஸகாயேஸ்வரர் மற்றும் பரிஹார தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகளை ஸ்ரீ.ரவிகுருக்கள், ஸ்ரீ.சிவா குருக்கள் நடத்தி வைத்தனர். ஏராளமான பக்தர்கள் மற்றும் கிளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு பிராத்தனை செய்தனர். கிளைத் தலைவர் ஸ்ரீ.எம்.ஜெயராமன் கோவில் நிர்வாகிகள் ஸ்ரீ.மீனாக்ஷிசுந்தரம், ஸ்ரீ.விஸ்வநாதன் ஆகியோர் கைங்கர்யங்களை மேற்கொண்டனர்.
26-02-2025 அன்று ராமாபுரம் அக்ரஹாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விஷாலாக்ஷி அம்பாள் சமேத ஸ்ரீ விஸ்வநாதர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் மற்றும் பூஜைகள் ஸ்ரீ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி நடத்தி வைத்தார். பக்தர்கள் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.பா.பாமா கோவில் நிர்வாகி ஸ்ரீ.எம்.பாலசுப்ரமணியன் ஆகியோர் கைங்கர்யங்களை மேற்கொண்டனர்.
|