- கோபிசெட்டிபாளையம் கிளை
07-03-2025 கிளையின் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், லெஷ்மி அஸ்டோத்ரம், கனகதாராஸ்தோத்ரம், ஹனுமன் சாலீஸா பாராயணம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.முரளி ஹிந்து கலாச்சாரம், மகாகவி பாரதியார் பற்றி எடுத்துரைத்தார். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பி.முரளிதரன் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து சிறப்புரையாற்றினார். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.சாம்பசிவம் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.அஸ்வின் பாலாஜி ஆகியோர் உரையாற்றினர். கிளைத் தலைவர் ஸ்ரீ.கே.சௌந்தர்ராஜன் மகளிர் தின வாழ்த்து தெரிவித்து தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி உரையாற்றினர். ஸ்ரீ.ரமேஷ், ஸ்ரீ.சுப்ரமணியம், ஸ்ரீ.சுந்தரம், ஸ்ரீ.ரவிச்சந்திரன், ஸ்ரீமதி.சகுந்தலா மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பொருளாளர் ஸ்ரீ.சி.என்.கிருஷ்ணன் நன்றியுரையாற்றினார்.
|