திருநின்றவூர் கிளை
17-10-2025 அன்று கிளையின் சிறப்பு செயற்குழு கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.விருத்தகிரி தலைமையில் நடைபெற்றது. உயிரிழந்த கிளை உறுப்பினர்களுக்கு, மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆடி மாதம் மற்றும் நவராத்ரி நாட்களில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம், ஸ்ரீ லலிதா சகஸ்ரநாமம் பாராயணம் சிறப்பாக நடத்தியவர்களை கிளையின் சார்பாக பாராட்டு தெரிவிக்கப்பட்டது. 12-10-2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற மாநில பொதுக்குழுவில் கிளைக்கு விருதினை வழங்கி கௌரவித்த மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் உள்ளிட்ட மாநில நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தீபாவளி திருநாளை முன்னிட்டு நம் சமூகத்தை சார்ந்த சிலருக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஸ்ரீ.டி.கே.கண்ணன் சிறப்பாக செய்திருந்தார். மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.ஆர்.விஜயலக்ஷ்மி நன்றியுரையாற்றினார்.
|