மணம்பூண்டி கிளை
06-06-2026 அன்று கிளையின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழா தலைவர் ஸ்ரீமதி.பர்வதவர்த்தினி ப்ரணவமூர்த்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. கடவுள் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ஹரிஷ்குமார் முன்னிலை வகித்தார். ஸ்ரீ.சந்திரசேகர் வரவேற்புரையாற்றினார். பொதுச் செயலாளர் ஸ்ரீ.சீதாராமன் ஆண்டறிக்கையை வாசித்தார். பொருளாளர் ஸ்ரீ.கணேசமூர்த்தி வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். அனைவரும் ஒப்புதல் வழங்கினார். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.குமார் ஐயர் பொதுச் செயலாளர் ஸ்ரீ.தண்டபாணி ஐயர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். ஸ்ரீ.கோபாலகிருஷ்ணன் நன்றி கூற கூட்டம் இனிதே நிறைவடைந்தது.
|