05-10-2025 அன்று மாவட்ட நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பி.எஸ்.விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.கவிதா இறை வணக்கம் பாடினார். மாவட்டத் தலைவர் சங்க உறுதிமொழி வாசிக்க அனைவரும் உறுதிமொழியேற்றனர். மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.பி.எ.கிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். தலைவர் தனது உரையில் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் மற்றும் 12-10-2025 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற உள்ள மாநில பொதுக்குழுவில் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க கேட்டுக் கொண்டார். மாவட்ட செயலாளர் ஸ்ரீ.டி.வாசுதேவன், மாவட்ட மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.ராதிகா கேசவன் மாவட்ட அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.வெங்கடேஷன், மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.ராகவன், மாநில இணைச் செயலாளர் குடந்தை ஸ்ரீ.டி.ராம்பிரசாத் மற்றும் கிளைத் தலைவர், நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.ராகவன் (வக்கீல்) நன்றி தெரிவிக்க ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
|