சங்கராபுரம் கிளை
21-12-2024 அன்று கிளை உபதலைவர் ஸ்ரீ.ஜெ.சூர்யநாராயணன் தலைமையில் சங்கராபுரம் பொது சேவை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இராம.முத்துகருப்பன் அவர்களிடம் பெஞ்ஜல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கிளையின் சார்பாக தொகை வழங்கப்பட்டது. கிளை பொருளாளர் ஸ்ரீ.என்.மஹாதேவன், ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீ.கே.கணபதி ஆகியோர் உடன் இருந்தனர்.
31-12-2024 அன்று தாம்ப்ராஸ் கிளை மற்றும் ஸ்ரீ காயத்ரி அறக்கட்டளை இணைந்து உபயதாரர்களால் 2025ம் ஆண்டு காலண்டர் மற்றும் இதர பொருட்கள் கிளைத் தலைவர் சிவஸ்ரீ.டி.எஸ்.ரவி குருக்கள் அவர்கள் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது.
|