தென்பாதி கிளை
07-04-2025 அன்று கிளையின் கூட்டம் தலைவர் ஸ்ரீ.அருள் வைத்தியநாதன் தலைமையில் நடைபெற்றது. சீர்காழி கிளை, தென்பாதி கிளை சிட்டி யூனியன் வங்கி சீர்காழி கிளை உதவியுடன் விசுவாவசு பஞ்சாங்கம் உறுப்பினர்களுக்கு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீ.ரவிச்சந்திரன் அவர்கள் இறுதி சடங்குகளுக்கு மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ரமணன் மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஆதரவோடு நடத்திக் கொடுக்கப்பட்டது.
14-04-2025 அன்று பஞ்சாங்க படனம் ஸ்ரீ.இராமன் சாஸ்திரிகள் பலன்களை விரிவாக எடுத்துரைத்தார். கிளைத் தலைவர் ஸ்ரீ.அருள்வைத்தியநாதன் தலைமையேற்று வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ரமணன் தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி உரையாற்றனிhர். மாநிலச் செயலாளர் ஸ்ரீ.சசிகோபாலன், கிளை பொருளாளர் (சீர்காழி) ஸ்ரீ.வெங்கட்ராமன், ஸ்ரீ.குமார் சாஸ்திரிகள், ஸ்ரீ.வெங்கட்ராமன், ஸ்ரீ.சங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் - குத்தாலம் கிளை
14-04-2025 அன்று கிளையின் விசுவாவசு வருட பஞ்சாங்க படனம் நிகழ்ச்சி நடைபெற்றது. கிளை ஆலோசகர் ஸ்ரீ.ராமமுரளி தலைமை தாங்கினார். ஸ்ரீ.கே.ஸ்ரீனிவாச சாஸ்திரிகள் பூஜைகளை நடத்தி வைத்தார். கிளை பொதுச் செயலாளர் வரவேற்புரையாற்றினார். கிளையின் அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.ஆர்.நடராஜன், ஆலோசகர் ஸ்ரீ.டி.கலியகுருமூர்த்தி, பொருளாளர் ஸ்ரீ.டி.கே.வி.ராஜா, செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.எஸ்.சங்கரன், ஸ்ரீ.எஸ்.வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். தாம்ப்ராஸ் உறுப்பினர் சேர்க்கை, தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தா பற்றி கலந்துரையாடப்பட்டது. உறுப்பினர்கள் அனைவருக்கும் பஞ்சாங்கம் வழங்கப்பட்டது. நிதி உதவி வழங்கிய சிட்டி யூனியன் வங்கி குத்தாலம் கிளைக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.எஸ்.ரகுராம் நன்றி தெரிவித்தார்.
|