ஓசூர் கிளை
09-03-2025 அன்று திருவிளக்கு பூஜை, கன்யா பூஜை மற்றும் சுமங்கலி பூஜை மிக விமர்சையாக நடைபெற்றது. பலர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். ஓசூர் குகை ஸ்ரீ சங்கர் ஷாகிதானந்தாஸ்வாமிகள் அனைவருக்கும் அருளாசி வழங்கினார். கிளைத் தலைவர் ஸ்ரீ.நாகராஜன் தலைமையில் மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.ரோகினி கணேஷ் மற்றும் நிர்வாகிகள் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்தனர்.
14-03-2025 அன்று ஸ்ரீ மரகதாம்பிகை சமேத ஸ்ரீ சந்திரசூடேஸ்ரத் திருத்தேர் விழாவை முன்னிட்டு கிளையின் சார்பாக பக்தர்களுக்கு கிளையின் சார்பாக நீர்மோர்/ பானகம் வழங்கப்பட்டது. நிர்வாகிகள் கலந்து கொண்டு ஒத்துழைப்பு நல்கின மற்றும் காரடையான் நோன்பு நாளில் கிளை மகளிர் அனைவருக்கும் மங்கள பொருட்கள் வழங்கப்பட்டது.
|