அம்பத்தூர் கிளை
22-09-2025 முதல் 01-10-2025 வரை நவராத்ரியை முன்னிட்டு கிளையும் ஆன்மீக சமாஜமும் இணைந்து தினமும் நாமசங்கீர்த்தனம், கும்மியாட்டம், கோலாட்டம், கலை நிகழ்ச்சி, நாட்டியம் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொதுச் செயலாளர் ஸ்ரீமதி.ராஜேஸ்வரி ஸ்வாமிநாதன், மாநில செயலாளர் ஸ்ரீமதி.வித்யா ஸ்ரீனிவாசன், மாவட்ட மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.சுமித்ரா சிவக்குமார், ஸ்ரீமதி.மோகனா லக்ஷ்மிநாராயணன், ஸ்ரீமதி.கிரிஜா ரவி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். சௌந்தர்யலஹரி பாராயணம் செய்யப்பட்டது. சரஸ்வதி பூஜை அன்று “அருள்புரிவாய் அபிராமியே” என்ற தலைப்பில் ஸ்ரீ.ஸ்ரீவத்ஸன் முரளி உபன்யாசம் செய்தார். செயலாளர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. அவர் சுமங்கலிகள் அனைவருக்கும் தாம்பூலம் வழங்கினார். கிளையின் சார்பாக அனைவருக்கும் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கிளைத் தலைவர் ஸ்ரீ.லெக்ஷ்மிநாராயணன், மகளிரணி செயலாளர் ஸ்ரீமதி.கிரிஜாரவி, மாநில ஆலோசகர் ஸ்ரீ.ராமமூர்த்தி, மாநில உபதலைவர் ஸ்ரீ.சத்தியமூர்த்தி மற்றும் கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிரணியினர் நிகழ்ச்சி ஏற்பாட்டினை மிக சிறப்பாக செய்தனர். இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.கே.கே.ஸ்ரீனிவாசன் நிகழ்ச்சி நடைபெற பேருதவியாக இருந்தார்.
சென்னை (வடக்கு) மாவட்டம் - கொரட்டூர் கிளை
கிளையின் சார்பாக ஸ்ரீமதி.கீதா சூரியநாராயணன் அவர்கள் இல்லத்தில் நவராத்ரி பூஜை நடைபெற்றது. தினமும் லலிதா சகஸ்ரநாமம், ஸ்ரீலக்ஷ்மி அஷ்டோத்ரம் மற்றும் பூஜைகளை செயற்குழு உறுப்பினர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி செய்து வைத்தார். தினமும் சுவாசினி மற்றும் கன்யா குழந்தைகளுக்கு வஸ்திரம் வழங்கப்பட்டது. கிளை மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.தைலா ஸ்வாமிநாதன் தலைமையில் நிர்வாகிகள் தினமும் நிகழ்ச்சி ஏற்பாட்டினை செய்தனர். அனைவருக்கும் தாம்பூலம் வழங்கப்பட்டது. கிளைத் தலைவர் ஸ்ரீ.ஸ்வாமிநாதன், உபதலைவர் ஸ்ரீ.நாராயணராஜா மற்றும் நிர்வாகிகள் தினமும் பூஜையில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
15-10-2025 அன்று மடிப்பாக்கத்தில் உள்ள சாமவேத பாடசாலையில் வேதம் பயிலும் மாணவர்கள், வாத்யார் மற்றும் பணியாளர்களுக்கு வஸ்திரம் வழங்கப்பட்டது. மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ஸ்வாமிநாதன், துணைத் தலைவர் ஸ்ரீ.நாராயணராஜா, மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.பாலாஜி, செயற்குழு உறுப்பினர்கள் ஸ்ரீ.மகாலிங்கம், ஸ்ரீ.ராமகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
17-10-2025 அன்று கிளையின் சார்பாக தீபாவளி திருநாளை முன்னிட்டு நம் சமுதாயத்தை சார்ந்த 35 நபர்களுக்கு வஸ்திரம் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கிளைத் தலைவர் பொதுச் செயலாளர், பொருளாளர், மகளிரணிச் செயலாளர் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
|