கடியாப்பட்டி கிளை
01-07-2025 அன்று அருள்மிகு ஸ்ரீபிரும்ம வித்லாம்பாள் உடனுறை ஸ்ரீபூமிஸ்வரஸ்வாமி ஆனி ப்ரமோற்ஸவம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஸ்ரீ.எஸ்.பாலசுப்ரமணிய சிவாச்சார்யார் அபிஷேகம் மற்றும் பூஜைகளை செய்து வைத்தார். கிளையின் ஆயுட்கால உறுப்பினர் ஸ்ரீ.எம்.ஸ்வாமிநாதன் அவர்களுக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டது. ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மேற்கொண்டனர். ஏராளமானோர் கலந்து கொண்டு ப்ரார்த்தனை செய்தனர்.
18-07-2025 அன்று மாவட்டம் மற்றும் கிளையின் கூட்டம் கிளைத் தலைவர் ஸ்ரீ.பி.பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. ஆலோசகர் ஸ்ரீ.பி.லெக்ஷ்மணன் முன்னிலை வகித்தார். மாவட்ட உபதலைவர் ஸ்ரீ.ஸ்ரீதரன் வரவேற்புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தாம்ப்ராஸ் பவுண்டேஷன் நன்கொடை, தாம்ப்ராஸ் மாத இதழ் சந்தாதாரரை அதிகரிப்பது பற்றி எடுத்துரைத்தார். பள்ளியிலிருந்து பணி ஓய்வு பெற்ற பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஜி.சேகர் கணேஷ் அவர்களை பாராட்டி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற குமாரி.ஸ்ரீ.எஸ்.கனகலெக்ஷ்மியை பாராட்டி நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு, சமஸ்க்ருதம் மொழியை பள்ளிகளில் விருப்பப்பாடமாக கற்க மாநில அரசு உரிய நடவடிக்கை மற்றும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் அறங்காவலராக பிராமண சமூகத்தை சேர்ந்தவர்களை நியமிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மகளிரணி செயலாளர் நன்றி கூற ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
|