திருநின்றவூர் கிளை
16-06-2024 அன்று கிளையின் செயற்குழு கூட்டம் ஸ்ரீ.டி.சி.மோகன் ஐயர் தலைமையில் நடைபெற்றது. விரைவில் பொதுக்குழு கூட்டம் நடத்துவது உறுப்பினர்களிடம் சந்தா தொகை வசூலிப்பது மாவட்ட/மாநில அமைப்பிற்கு சந்தா தொகை கொடுப்பது மற்றும் பல விஷயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது. கூட்ட ஏற்பாட்டை பொதுச் செயலாளர் ஸ்ரீ.என்.பரமேஸ்வரன் செய்தார் சிறப்பு அழைப்பாளராக மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஸ்ரீ.ராமநாத ஐயர் மாநில செயலாளர் ஸ்ரீ.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். கிளை நிர்வாகிகள் ஸ்ரீ.டி.டி.ரவிக்குமார் ஸ்ரீமதி.அமிர்தவல்லி நாராயணன், ஸ்ரீமதி.ஆர்.விஜயலக்ஷ்மி விஸ்வநாதன் ஸ்ரீமதி.வசுமதிகிரிதரன், ஸ்ரீமதி.நித்யாபாலாஜி, ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், ஸ்ரீ.கணபதிசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.விஜய்சாரதி நன்றி தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம் - பள்ளிப்பட்டு கிளை
28-05-2024 அன்று புதிய கிளை துவக்கி வைக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் ஸ்ரீ.எம்.கே.ஸ்ரீனிவாசன் தலைமை தாங்கினார். ஸ்ரீ.பாலசரவணன் முன்னிலை வகித்தார். புதிய கிளையின் தலைவராக ஸ்ரீ.பாலசரவணன் பொதுச் செயலாளராக ஸ்ரீ.சப்தகிரி, பொருளாளராக ஸ்ரீமதி. உஷா, இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.பாலகார்த்திகேயன், மகளிரணி செயலாளராக செல்வி.கெஜலக்ஷ்மி, உபதலைவராக ஸ்ரீ.பாலகுருநாதன், ஆலோசகராக ஸ்ரீ.சாய்ராஜ் மற்றும் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன் ஆகியோர் பொறுப்பேற்றுக் கொண்டனர். மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ஸ்ரீனிவாசன், மாவட்ட அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.பரமேஸ்வரன், பூந்தமல்லி கிளைத் தலைவர் ஸ்ரீ.கணபதி, திருநின்றவூர் கிளைப் பொருளாளர் ஸ்ரீ.ரவிகுமார், முன்னாள் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஸ்ரீமதி.அனுசுயா ஸ்ரீதர், ஆர்.கே.பேட்டை ஸ்ரீ.ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டு கிளை நிர்வாகிகளை வாழ்த்தியும், செயல்பாடுகள் பற்றி பேசினர். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஸ்ரீ.ராமநாதன், மாநில பொருளாளர் பருத்திப்பட்டு ஸ்ரீ.நரசிம்மன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சங்க செயல்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சி ஏற்பாட்டை மாநில அமைப்புச் செயலாளர் திண்டிவனம் ஸ்ரீ.எல்.குமார் அவர்கள் செய்திருந்தார். கிளைத் தலைவர் ஸ்ரீ.பாலசரவணன் நன்றியுரையாற்றினார்.
|