ஊரப்பாக்கம் கிளை
19-07-2025 அன்று புதிய கிளையின் துவக்க விழா செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் ஸ்ரீ.பத்மநாபன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.வெங்கடேஷ் வரவேற்புரையாற்றினார். ஸ்ரீ.ஹரிஹர ஷர்மா முன்னிலை வகித்தார். ஊரப்பாக்கம் கிளைத் தலைவராக ஸ்ரீ.ஹரிஹரஷர்மா, உபதலைவராக ஸ்ரீ.நாகராஜன், ஆலோசகராக ஸ்ரீ.ஜெயராமன், பொதுச் செயலாளராக ஸ்ரீ.ரவிக்குமார், பொருளாளராக ஸ்ரீ.ஹரிஹரன், இளைஞரணிச் செயலாளராக ஸ்ரீ.பரத்ராஜ், மகளிரணிச் செயலாளராக ஸ்ரீமதி.ராதிகா ராஜாராம், மகளிரணி இணைச் செயலாளராக ஸ்ரீமதி.ரஜினிசுந்தரராமன், ஸ்ரீமதி.சுதா குருபிரசாத், ஆகியோரை அறிமுகம் செய்து பதவியேற்றுக் கொண்டனர். மண்ணிவாக்கம் கிளைத் தலைவர் ஸ்ரீ.சம்பத்குமார் தொழுப்பேடு கிளைத் தலைவர் ஸ்ரீ.கல்யாணராமன், சித்தாலப்பாக்கம் கிளைத் தலைவர் ஸ்ரீ.கேஸவ பட்டாச்சாரியார், ஸ்ரீ.சுரேஷ், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.பாலாஜி, மாவட்ட பொருளாளர் ஸ்ரீ.பாலாஜி குருமூhத்தி, நங்கநல்லூர் கிளைத் தலைவர் ஸ்ரீ.அனிருத் ஆகியோர் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை வாழ்த்தி சிறப்புரையாற்றினர். மாநில துணை பொதுச் செயலாளர். ஸ்ரீ.ராமநாதன் சங்க செயல்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினார். பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஸ்ரீ.ஹரிஹரன் நன்றி கூற தேசிய கீதத்துடன் கூட்டம் நிறைவடைந்தது. நிகழ்ச்சி ஏற்பாட்டினை கூடுவாஞ்சேரி ஸ்ரீ.வெங்கடேஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் ஸ்ரீ.நடராஜன், மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.கார்த்திக் பாபு, மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.குமார், ஸ்ரீமதி.ராதிகா ராஜாராம் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.
|