கொட்டிவாக்கம் கிளை
14-04-2026 அன்று கிளையின் சார்பாக பராபவ வருஷ பஞ்சாங்க படனம் ஸ்ரீ.ரவி சாஸ்த்ரிகள் நடத்தி வைத்தார். டாக்டர் கணேஷ் ஸ்ரீமதி.லலிதா கணேஷ், ஆடிட்டர் ஸ்ரீ.கீர்த்திவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தனர். அனைவருக்கும் பஞ்சாங்கம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. கிளைத் தலைவர் ஸ்ரீ.எஸ்.வெங்கட்ராமன் இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.வி.பாலாஜி நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.
15-04-2026 முதல் 19-04-2026 வரை லோக nக்ஷமத்திற்காகவும் பாரதம் வல்லரசாக உருவாகிடவும் கலைமாமணி ஸ்ரீ காஞ்சி காமகோடி பீட ஆஸ்தான வித்வான் திருச்சி ஸ்ரீ.கே.கல்யாணராமன் அவர்களின் ஸ்ரீ கம்பராமாயணம் உபன்யாசம் நடைபெற்றது. ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். டாக்டர் கணேஷ், கிளைத் தலைவர் ஸ்ரீ.வெங்கட்ராமன், ஆகியோரை ஸ்ரீ.கே.கல்யாணரான் கௌரவித்தார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஸ்ரீ.பாலாஜி அவர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருந்தது.
|