வில்லிவாக்கம் கிளை
15-08-2025 அன்று மாநிலத் தலைவர் பிராமண சேவா ரத்னா திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் நல்லாசியுடன் புனருத்தாரண விழா நடைபெற்றது. கடவுள் வாழ்த்து, வேத கோஷம், சங்க உறுதிமொழியுடன் கூட்டம் துவங்கியது. ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்ட கிளைத் தலைவர் ஸ்ரீ.ஹரி கிருஷ்ணன் கிளை நிர்வாகிகளை அறிவித்தார். பொதுச் செயலாளர் ஸ்ரீ.டி.என்.ரமேஷ், கிளை உபதலைவர் ஸ்ரீ.லக்ஷ்மி நரசிம்மன், ஸ்ரீமதி.ஜெயந்தி, பொருளாளர் ஸ்ரீமதி.அஸ்வினி ஹரி, மகளிரணிச் செயலாளர் ஸ்ரீமதி.சுஜாதா, இளைஞரணிச் செயலாளர் ஸ்ரீ.நவகோடி மகளிரணி இணைச் செயலாளர் ஸ்ரீமதி.ரஞ்ஜனி, இளைஞரணி இணைச் செயலாளர் ஸ்ரீ.ரெங்கராஜ், ஆலோசகர் ஸ்ரீ.புருஷோத்தமன் ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர். மாம்பலம் கிளைத் தலைவர் ஸ்ரீ.சாய், பெரம்பூர் கிளை பொதுச் செயலாளர் ஸ்ரீ.ஜெய்குமார், அண்ணாநகர் கிளைத் தலைவர் ஸ்ரீ.கிருஷ்ணமூர்த்தி சூளைமேடு கிளைத் தலைவர் ஸ்ரீ.ஆர்.எம்.ஸ்ரீனிவாசன், வடசென்னை பொருளாளர் ஸ்ரீ.ராமஸ்வாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வடசென்னை மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சதீஷ்குமார் தாம்ப்ராஸ் செயல்பாடுகள் பற்றி சிறப்புரையாற்றினார். நன்றியுரை, ஸ்வஸ்தி வாசகத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.
|