பாப்பாரப்பட்டி கிளை
23-07-2025 அன்று மாநில அமைப்புச் செயலாளர் ஸ்ரீ.குமார் தலைமையில் தருமபுரி மாவட்டத் தலைவர் ஸ்ரீ.சிவக்குமார் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் ஸ்ரீ.நாகராஜன் ஆகியோர் முன்னிலையில் சுதந்திரப் போராட்ட தியாகி ஸ்ரீ.சுப்பிரமணியசிவம் ஐயர் அவர்களின் 100வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருஉருவ படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது வாழ்க்கை வரலாறு எடுத்துரைக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ரமணன், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஹோசூர், ஆம்பூர் மற்றம் பாப்பாரப்பட்டி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
|