11-09-2025 மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு எட்டயபுரத்தில் அமைந்துள்ள மணி மண்டபத்தில் அவரது திருஉருவ சிலைக்கு மாவட்டத் தலைவர் அட்வகேட் ஸ்ரீ.சந்திரசேகர் தலைமையில் மாவட்ட பொதுச் செயலாளர் ஸ்ரீ.விஸ்வநாதன் முன்னிலையில் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாநில அமைப்பு செயலாளர் திண்டிவனம் ஸ்ரீ.எல்.குமார் மாவட்ட இளைஞரணி செயலாளர் ஸ்ரீ.விக்னேஷ், இலுப்பையூரணி கிளைத் தலைவர் ஸ்ரீ.சங்கரநாராயணன், பொதுச் செயலாளர் ஸ்ரீ.குமார், அகில பாரத ஹிந்து மஹா சபை தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஸ்ரீ.ரகு, எட்டயபுரம் கிளை பொருளாளர் ஸ்ரீ.சுப்ரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர். ஸ்ரீ.விஸ்வநாதன் நன்றி தெரிவித்தார்.
|