அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே
 

நமஸ்காரம்/ஆசீர்வாதம்.

“தமிழகம் கண்ட மவுனப் புரட்சி”

2026ம் ஆண்டு தமிழக சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் அனைத்து கட்சிகளுக்கும் பெரும் அதிர்ச்சியினை உருவாக்கிடும் வகையில் அமைந்து விட்டன.

பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு நாம் நமது பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தமிழக வாக்காளர்கள் திரு.ஜோசப் விஜய் அவர்கள் மீதும், தமிழக வெற்றி கழகத்தின் மீதும் வைத்துள்ள பெரும் நம்பிக்கைக்கு அவரும் அவரது கட்சியும் பார்த்திரர்களாகி நன்கு ஆட்சி நடத்திடுவார்கள் என்று எதிர்நோக்கிடுவோம்.

தமிழக அரசியல் வரலாற்றில் திமுக கூட்டணி மற்றும் அஇஅதிமுக கூட்டணி போன்ற மிகப்பெரிய கூட்டணிகளை வீழ்த்தி தமிழகத்தின் திராவிட அரசியலுக்கும் குறிப்பாக வெறுப்பு அரசியலுக்கும் வாக்காளர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்த தேர்தல் முடிவுகளில் பாரதீய ஜனதா கட்சியின் நிலைமை பரிதாபகரமாக உள்ளது.

மிகவும் குறிப்பாக பல தொகுதிகளில் வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்கு சேகரித்த போதிலும், அவர்களை புறம் தள்ளி தமிழக வெற்றி கழகத்தின் விசில் சின்னத்திற்கு வாக்களித்து மாபெரும் மவுனப் புரட்சியினை உருவாக்கி உள்ளனர்.

பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றும் தமிழக வெற்றி கழகத்திற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காததனால் அவர்கள் காங்கிரஸ் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்திட வேண்டிய நிர்பந்தம் உருவானது.

தமிழக வெற்றி கழகத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்துவிட்டு, தேர்தல் கூட்டங்களில் எல்லாம் அவர்களை குற்றம் கண்டு விட்டு, அவர்களது ஆட்சியில் பங்கு கொள்வது நேர்மையற்ற அரசியல் என்று திமுகவும், அஇஅதிமுகவும் குற்றம் சாட்டுகின்றன. தார்மீக அடிப்படையில் இந்த தேர்தலுக்கு பின்பான கூட்டணி என்பது தவறாகவும், முரணாகவும் இருந்திட்டாலும், அரசியலில் இது போன்ற மாற்று சூழ்நிலைகள் உருவாகுவது சகஜம் தான். மேலும் வாக்காளர்கள் அளித்திருக்கக்கூடிய இந்த வாய்ப்பினை வெற்றி பெற்ற கட்சியும் அதன் தலைவரும் பயன்படுத்திக் கொண்டிட இவ்வாறு ஆதரிப்பது தவறு அல்ல என்பது நமது கருத்தாகும்.

தமிழக வெற்றி கழகம் தமது கட்சியிலும், ஆட்சியிலும் பல சமூகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கி உள்ளது. அமைச்சரவையில் இரண்டு (2) பிராமண சமூகத்தினரும், எட்டு (8) தலித்துகளும் (SC) அமைச்சர்களாக இடம் பெற்றிருப்பது வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகும். நாமும் நமது நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றோம்.

திராவிட அரசியல் மற்றும் சமூக நீதி அரசியல் என்று தம்பட்டம் அடித்து கொள்ளும் திமுக, அஇஅதிமுக கட்சிகள் இதுவரை தலித்துகளுக்கு (SC) இந்த அளவிற்கு வாய்ப்பு கொடுத்ததில்லை. மக்கள் தொகை கணக்கு அடிப்படையில் தமிழகத்தில் மிகப்பெரிய சமூகம் தலித்துகள் (SC) தான். தற்போது அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்ற வாய்ப்பு “சமநீதியான சமூக நீதியாகும்”.

தமிழகத்தை சேர்ந்த மாபெரும் தோல்வியடைந்த திராவிட கட்சிகள் ஏதேனும் சூழ்ச்சிகளை செய்து திரு.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையிலான ஆட்சியினை கவிழ்த்திட முடியுமா என்று முயற்சிக்கின்றனர். அதே சமயம் அஇஅதிமுகவில் பல உட்கட்சி பூசல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன. மற்றொருபுறம் மாண்புமிகு திரு.ஜோசப் விஜய் அவர்கள் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர்; அதனால் கிறிஸ்தவர்களுக்கு மட்டும் நியாயம் வழங்குவார் என்கின்ற பிரச்சாரமும் நடைபெறுகின்றது. இதனை எதிர்பார்த்த முதல்வர் அவர்கள் தமது பதவியேற்பு விழாவில் “நான் ஹிந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் ஆகிய மூன்று முகங்களாக இருந்திடுவேன்” என்று தெளிவாக சொல்லி உள்ளார். முதல்வரால் இதை நடைமுறையில் செயல்படுத்த முடிகிறதா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

அவருக்கும் அவரது அமைச்சர்களுக்கும் (மாண்புமிகு அமைச்சர் திரு.செங்கோட்டையன் தவிர) அரசு நிர்வாகம் என்பது ஓர் புதிய அனுபவமாக இருந்திடும். மக்கள் ஆதரவினை பெற்று புதிதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் திரு.ஜோசப் விஜய் அவர்களுக்கு குறைந்தபட்ச அவகாசமாவது கொடுத்திட வேண்டும்.

ஒரு சில மாதங்களில் அவருடைய அணுகுமுறையினையோ, செயல்பாடுகளையோ நாம் பொறுமையுடன் கவனித்து அவைகள் பற்றி கருத்து கூறிடுவோம். இது தான் நடுநிலையான அணுகுமுறையாக இருந்திடும் என்று நாம் நம்புகின்றோம்.

அதே சமயம் நம் இயக்கம் பிராமண குல பெயரில் இருந்திட்டாலும், நம்மை மற்றவர்கள் ஜாதி சங்கமாக கருதினாலும், நாம் ஒரு பெரிய சேவை நிறுவனமாக தமிழகத்தில் சேவையாற்றி வருகின்றோம். தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்முறைகளும் பிரச்சாரமும் எவ்வாறு அமைந்து “ஓர் பெரும் மவுனப் புரட்சியினை” தமிழகத்தில் உருவாக்கியது என்பதனை நமது பல்நிலை நிர்வாகிகள் கூர்ந்து கவனித்து, நன்கு புரிந்து கொண்டிட வேண்டும¼

D;.

Special Thanks to Hon’ble Chief Minister Thiru.C.Joseph Vijay for having given opportunities to Two Brahmin Ministers in his cabinet.

நன்றி !

இங்ஙனம்

உங்கள் அன்பு சகோதரன்

திருவொற்றியூர்

என்.நாராயணன்

மாநிலத் தலைவர்

E-mail : ungalnarayanan@gmail.com

Thambraas State Head Quarters

Whatsapp Numbers : 81480 11172 /

81480 11106 (10.00 am to 6.00 pm)




Subscribe
Youtube Channel
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS