என் கேள்விக்கென்ன பதில்

சமீபத்தில் ராகுல் காந்தி தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைககள் இருக்கக்கூடிய ஓர் புகைப்படம் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றதே ? எது தான் உண்மையோ


- எம்.சுதர்சனன், ஸ்ரீரங்கம்

"ஒரு அரசியல் தலைவரின் குடும்ப வாழ்க்கை பற்றி விமர்சிப்பது என்பது நமக்கு விருப்பமில்லாத செயல்பாடாகும். ராகுல் காந்தி அவர்களுடைய பொது வாழ்க்கை மட்டும தான் நம்முடைய விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட வேண்டும்.


வங்க தேசத்தில் நடக்கும் வன்முறைகள் இந்தியாவிலும் நடந்திடலாம் என்று சல்மான் குர்ஷித் கூறியுள்ளாரே ? இந்த கருத்து சரியா?


- பி.ரமேஷ், திண்டுக்கல்

"கருத்து சொல்ல அவருக்கு உரிமை உண்டு. ஆனால் கருத்து அபத்தமாக உள்ளது. அதே போன்று வங்க தேசம் பற்றி உத்திர பிரதேச முதல்வர் திரு.யோகி ஆதித்யநாத் அவர்களும் கருத்து சொல்லி உள்ளார். அதுவும் அர்த்தமானதா என்று ஆலோசிக்க வேண்டும்.


சமீபத்தில் தமிழக அரசினுடைய இந்து அறநிலையத்துறை பழனியில் முத்தமிழ் முருகர் மாநாடு நடத்தியது தேவைதானா ?


- ஆர்.சுப்ரமணியன், தர்மபுரி

"நாம் அனைவரும் ஆன்மீகத்தில் இருப்பவர்கள். அந்த அடிப்படையில் இந்த ஆன்மீக நிகழ்வினை நாம் வரவேற்கத்தான் செய்ய வேண்டும். அதே சமயம் திமுக அரசு இதனை செய்ததில் ஏதேனும் உள்நோக்கம் உள்ளதா என்றால் நிச்சயம் உள்நோக்கம் உள்ளது. திமுக பெரும்பான்மை மக்களாக இருக்கக்கூடிய ஹிந்துக்களுக்கு எதிரான கட்சி என்று பாஜகவினர் செய்திடும் பிரச்சாரத்தினை கையாளக் கூட நடத்தி இருக்கலாம். எப்படி இருந்தாலும் நம்மை பொறுத்தவரை பழனி ஸ்ரீ தண்டாயுதபானி (முருகப் பெருமான்) புகழ் பாடப்பட்டிருப்பது மற்றும் அறநிலையத்துறை கல்லூரி மாணவ மாணவிகளுக்கு கந்த சஷ்டி கவசம் போட்டிகள் நடத்த இருப்பது மகிழ்ச்சி அளிக்கக்கூடியது தான். ஆன்மீகம் வாழ்க. அது பாஜக ஆன்மீகமா, தி.மு.க ஆன்மீகமா, அஇஅதிமுக ஆன்மீகமா என்று நாம் ஆராய வேண்டியதில்லை.

Youtube Channel
Subscribe
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS