என் கேள்விக்கென்ன பதில்

தற்போதைய காலகட்டத்தில் தமிழகத்தில் போதைப் பொருள் நடமாட்டம் மிக அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகின்றதே. அது உண்மையா அல்லது கட்சி அரசியலா ?

- வி.நாராயணன், திருவாரூர்

"உண்மை தான். மிகப்பெரும் அளவில் தமிழகம் முழுவதும் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் மாணவர்களுக்கு போதை பழக்கத்தினை பல வழியில் அறிமுகப்படுத்தி போதை பொருள் பழக்கம் கொடி கட்டி பறக்கிறது. இவ்விஷயத்தில் திமுக ஆட்சிக்கு மிகவும் கெட்ட பெயர் தான். இவ்விஷயத்தில் எதிர்கட்சிகள் அரசியல் செய்வது நல்லது தான். ஏனெனில் அது மக்களுக்கு உதவியாக இருந்திடும்.  


டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் ஓர் படித்த பண்பாளராக அடையாளம் காணப்பட்ட அரசியல்வாதி. அவர் மீது மத்திய அரசு வழக்கு தொடுக்கின்ற போது அதனை பழிவாங்கும் நடவடிக்கை என்று சொல்லப்படுகின்றதே ?

- ஆர்.ராமமூர்த்தி, திருவள்ளூர்

"திரு.அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையும் ஆம் ஆத்மி கட்சியும் மக்களிடையே வளர்ந்து வருவது மத்திய ஆட்சியில் உள்ள பாஜ கட்சிக்கு சவாலாகத் தான் இருந்திடும். அவர்களின் வளர்ச்சியினை கட்டுப்படுத்திட அரசியல் நடவடிக்கைகளை பாஜக எடுப்பது தவறில்லை. ஆனால் வழக்கு தொடுத்து கைது செய்வது என்று வருகின்றபொழுது அதற்கான ஆதாரம் இல்லாமல் மத்திய புலனாய்வுத் துறை அமைப்புகள் ஈடுபடாது என்பது நாடறிந்த உண்மை. நல்லவராக திறமை உள்ளவராக காணப்பட்ட திரு.அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு விஷயத்தில் சறுக்கிவிட அதனை மத்திய அரசு பயன்படுத்திக் கொள்கின்றது என்று சொல்லுவோரும் உண்டு.


தமிழ்நாடு பிராமணர் சங்க தலைவர் திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் திமுகவினரையோ, திமுக அரசையோ தாக்கி பேசுவதில்லை, அறிக்கை விடுவதில்லை என்கின்ற புகார் உள்ளதே ?

- ஆர்.குப்புஸ்வாமி, திருநெல்வேலி

"தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கின்றவர். ஆட்சியில் இருக்கின்ற கட்சிகளிடம் அதாவது திமுகவிடமும், பாஜகவிடமும் ஓர் நல்உறவினை வைத்துக் கொள்ளத் தான் வேண்டும். அதே போன்று அவர் பல்வேறு அரசியல் தலைவர்களோடு தொடர்பிலும் இருக்கின்றார். பிராமண துவேஷத்திற்கு ஆட்படுத்தப்பட்ட சமூகத்திற்கு உதவிட வேண்டுமானால் பிராமண சகோதர, சகோதரிகளை பாதுகாத்திட வேண்டுமானால், தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் இம்மாதிரி தான் செயல்பட வேண்டும், செயல்பட முடியும். அதே சமயம் தேவைப்படும் தருணங்களில் நமது மாநிலத் தலைவர் திருவொற்றியூர் ஸ்ரீ.என்.நாராயணன் அவர்கள் அரசினை குறை கூறி உள்ளார். குற்றம் சொல்லி உள்ளார்கள். சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் மீட்பு போராட்டத்தில் நேரடியாக களம் இறங்கிய நமது தலைவர் 6 மணி நேரம் சிறை பிடிக்கப்பட்டு மற்றவர்களுடன் இருந்தார். மாநிலத் தலைமைக்கு தேவை தெளிவு, துணிவு மற்றும் சாதுர்யம்.

Youtube Channel
Subscribe
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS