என் கேள்விக்கென்ன பதில்

எஸ்.ஐ.ஆர் என்று அழைக்கப்படுகின்ற தீவிர வாக்காளர் பட்டியல் மறு பரிசீலனை என்பதனை ஏன் எதிர்கட்சிகள் எதிர்க்கின்றனர். குறிப்பாக திமுக தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களும் கடுமையாக எதிர்க்கின்றார் இதன் காரணம் என்ன ?

- எஸ்.சாரங்கபாணி, தஞ்சாவூர்


"வெறும் கட்சி அரசியல் தான். தேர்தல் ஆணையம் என்பது ஓர் தன்னாட்சி உரிமை கொண்ட நிறுவனம். அவர்கள் தங்களது பணிகளை முறையாக செய்து வருகின்றனர். வாக்காளர் பட்டியல் மறுபரிசீலனை என்பதில் இறந்தவர்களின் பெயர்களும், இந்தியாவில் வசிக்காதவர்களின் பெயர்களும் மற்றும் வெளிநாட்டு பிரஜைகளின் பெயர்களும் நீக்கப்படும். இதில் ஆட்சேபிப்பதற்கு எதுவுமே இல்லை. கட்சி அரசியலுக்காக மத்திய பாஜக அரசு சிறுபான்மையினர் வாக்குகளை நீக்குகின்றனர் என்று பொய் பிரச்சாரம் செய்கின்றார்கள்.


அஇஅதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மிகப் பிடிவாதமாக தங்கள் கட்சியின் முன்னாள் நிர்வாகிகள் டி.டி.வி.தினகரன் மற்றும் ஓ.பி.எஸ். ஆகியோரை சேர்க்க மறுக்கின்றாரே ?

- கே.ரங்கஸ்வாமி, ஸ்ரீரங்கம்


"இந்த அணுகுமுறைக்கான முதற் காரணம் நீயா நானா என்கின்ற போட்டி. மேலும் கடந்த கால பங்கு தகராறும் ஓர் அங்கமாக இருக்கலாம் என்று பத்திரிக்கையாளர்கள் கருதுகின்றனர்.


அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களின் பேச்சுக்களும், அறிக்கைகளும் பொறுப்பற்ற வகையிலும் அர்த்தமற்ற வகையிலும் தொடர்ந்து இருந்து வருகின்றனவே ?

- என்.தன்யாஸ்ரீ, மதுரை


"ஆமாம். அவருக்கு இந்தியாவும் ரஷ்யாவும் நல் உறவு வைத்திருப்பது பிடிக்கவில்லை. மேலும் “பெரிய அண்ணன்” என்கின்ற அமெரிக்காவின் அணுகுமுறைக்கு இந்தியா அடங்கிப் போக வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார். பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக மத்திய அரசு இவ்விஷயத்தில் அதிபர் டிரம்பிற்கு கீழ்படிய மறுத்து வருகின்றது. அமெரிக்காவிற்கும் பாரதத்திற்கும் இடையே ஓர் நிழல் போர் நடந்து வருகின்றது. நாம் நிச்சயமாக தோற்றுவிட மாட்டோம் என்று நம்பலாம்.

Youtube Channel
Subscribe
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS