என் கேள்விக்கென்ன பதில்

செயற்கை நுண்ணறிவு (AI) பற்றி ஒரு புறம் நல்ல வாய்ப்புகளும், மறுபுறம் சில அபாயங்களும் தெரிவிக்கப்படுகின்றனவே ?

- ஆர்.சுப்ரமண்யன், மதுரை


"செயற்கை நுண்ணறிவு (AI) ஓர் மாபெரும் தொழில்நுட்ப புரட்சியாக உலகளவில் உருவாகி வருகின்றது. இந்த தொழில்நுட்பம் பல துறைகளில் பெரும் மாற்றங்களை உருவாக்கிடும் என்று நிச்சயமாக தெரிய வருகின்றது. இதனால் சில நன்மைகள் நமக்கு ஏற்பட்டிடும் என்றும் தெரிய வருகின்றது.

அதே சமயம் முதல் அபாயமாக மிகப்பெரும் வேலை வாய்ப்பு இழப்பு (Job Losses). இரண்டாவது அபாயமாக இந்த செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கு எதிராக பல தீமைகளை உருவாக்கிடும் என்றும் அஞ்சப்படுகின்றது. இந்த தொழில்நுட்பம் அளிக்கக்கூடிய நல்ல அம்சங்களோடு அதனால் ஏற்படக்கூடிய பூதாகாரமான அபாயங்களையும் கண்டறிந்து தக்க பாதுகாப்பு நடைமுறைகளை வகுத்திட வேண்டும் என்பது தான் தாம்ப்ராஸின் நிலைப்பாடாக உள்ளது.

Youtube Channel
www.youtube.com/@thambraas1980
Subscribe
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS