என் கேள்விக்கென்ன பதில்

திரு.விஜய் அவர்களின் தவெக கட்சியினை ஆதரித்துக் கொண்டே அதனை எதிர்க்கின்ற கருத்துக்களை தமிழக கம்யூனிஸ்ட் தலைவர்கள் சொல்லி வருகின்றார்களே ?

- ஆர்.சந்திரசேகரன், விருதுநகர்


"ஆங்கிலத்தில் Blow Hot and Blow Cold என்று சொல்லுவார்கள். அந்த அடிப்படையில் தமிழக கம்யூனிஸ்ட் கட்சியினர் குழம்பிப் போய் இருக்கின்றனர். திமுகவிடம் நிதி பெற்றுக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தினுடைய பொது வாழ்க்கையில் வர்க்க பேதத்தினை பேசிடாமல் ஜாதி அடிப்படையில் பேசி வீணாய் போன கட்சிகளாக இருக்கின்றன தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள். அவர்களின் சகாப்தம் நிறைவடைகின்ற தருணம் விரைவில் வந்திடும் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.


இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி மற்றும் மேன்மை அறிய ஏதேனும் குறியீடுகள் உள்ளனவா ?

- எஸ்.புஷ்பா, காஞ்சீபுரம்


"நிபுணர்கள் அளிக்கின்ற சம்ப்ரதாயமான குறியீடுகள் (GDP etc) ஒரு புறம் இருந்திட, பெரும் எண்ணிக்கைகளில் வீடுகள் விற்பனையாவதும், வாகனங்கள் விற்பனையாவதும் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய குறியீடாக எடுத்துக் கொள்ளலாம் என்பது தான் நிபுணர்களின் கணிப்பாகவும் உள்ளது.


வந்தே மாதரம் பாடல் மிக அதிக நேரம் எடுத்துக் கொள்வதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கருதுகின்றனர் ? இது உண்மையா ?

- எஸ்.வித்யாலக்ஷ்மி, நாகர்கோவில்


"உண்மை தான். வெட்டிப் பேச்சு, வீண் பேச்சு, விதண்டாவாதம் இவைகளுக்கெல்லாம் நாம் ஒதுக்குகின்ற நேரத்தினை கணக்கிடும் பொழுது வந்தே மாதரம் பாடல் எடுத்துக்கொள்ளும் நேரம் ஒன்றும் பாதிப்பினை உருவாக்கிடாது. தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியே இவ்விஷயத்தில் நிலை தடுமாற்றத்தில் சிக்கியுள்ளதனை நாம் காண்கின்றோம். நம்மை பொறுத்தவரையில் தேச பக்தி, தெய்வ பக்தி குறிப்பாக தேசிய சிந்தனை தமிழகத்தில் வளர்க்கப்பட வேண்டும். எனவே நாம் வரவேற்கின்றோம் வந்தே மாதரம் பாடலை. வந்தே மாதரம் !.

Youtube Channel
www.youtube.com/@thambraas1980
Subscribe
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS