என் கேள்விக்கென்ன பதில்

காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பாஜக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களை ஆதரித்து அடிக்கடி பேசி வருவதன் உள்நோக்கம் என்னவோ ?

- ஆர்.நாராயணன், கல்பாத்தி


"சசிதரூர், நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எடுக்கின்ற அனைத்து நடவடிக்கைகளும் கண்மூடித்தனமாக எதிர்க்கக் கூடாது என்றும் நல்ல முயற்சிகளை ஆதரிக்க வேண்டும் என்கின்றார். இதனை ஒரு Neutral Stand என்றும் எடுத்துக் கொள்ளலாம்; அல்லது காங்கிரஸ் கட்சிக்குள் அவர் ஓரங்கட்டப்பட்டு வருவதனை முன்பே அறிந்து கொண்டு செயல்படுகின்றார் என்றும் சொல்லலாம்.


பாட்டாளி மக்கள் கட்சியில் உருவாகி உள்ளது போல் மதிமுகவிலும் உட்கட்சி சண்டை உருவாகி உள்ளதே ?

- எம்.விஸ்வநாதன், விழுப்புரம்


"அரசியல் என்றாலே அதிகாரப் பங்கு, நிதி ஆதாரப் பங்கு ஆகியவற்றில் சச்சரவுகள் உருவாகத்தான் செய்யும். சில கட்சிகளால் இந்த சச்சரவுகளை அறைகளுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள முடியும். பாமகவிலும், மதிமுகவிலும் ஏற்பட்டுள்ள சர்ச்சை சந்தைக்கு வந்துள்ளது என்பது தான் வித்தியாசம்.


சீன நாட்டின் ஆயுத தயாரிப்புகளுக்கும் நமது நாட்டின் ஆயுத தயாரிப்புகளுக்கும் உலக சந்தையில் எவ்வாறு வரவேற்புள்ளது ?

- எஸ்.குப்புஸ்வாமி, ஆவடி


"சீன நாட்டின் ஆயுத தயாரிப்புகள் தான் பிரபலமாகவும் பெரிய எண்ணிக்கையிலும் இருப்பதாக தகவல்கள் தெரிவித்தன. ஆனால் “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கைக்கு பிறகு இந்திய ஆயுதங்களுக்கு ஆதரவும், மதிப்பும் பல நாடுகளில் பெருமளவில் அதிகரித்துள்ளது என்று தற்போது சொல்லப்படுகின்றது.

Youtube Channel
Subscribe
 
Online Payment
Now Make Your State Patron Magazine Subscription and Donation Through Online Payment Gateway Service Provide By THAMBRASS